எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். […]

தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது […]