மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்சி கோபிசந்த் படால்கர் இந்த ஆண்டு பிப்ரவரியில் அவுரங்காபாத் பெயரை மாற்றியதைத் தொடர்ந்து பெயரை மாற்றக் கோரினார். […]
CMO
முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம் ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலையேற்றம் ஒன்றை மட்டும் மூன்று மாத இடைவெளியில் மக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது. […]
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை நகரமான ஜோஷிமத்தின் சிங்தார் வார்டில் நேற்று மாலை கோயில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த நேரத்திலும் பெரும் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வாழும் நேரத்தில் இந்த நடைபெற்றுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து கைவிடப்பட்ட நிலையில், சம்பவம் நடந்தபோது கோயிலுக்குள் அவர்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக […]
மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) […]