ஓடும் காரின் மேற்கூரையில் காவலர் ஒருவர் தொற்றிக்கொண்டு செல்லும் காட்சிகள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தின. தப்பியோடிய காரை விடாமல் பிடிப்பதற்காக தலைமைக் காவலர் வேல்முருகன் மேற்கொண்ட இந்த துணிச்சலான நடவடிக்கையே தற்போது கவனம் பெற்றுள்ளது. சுமார் 40 கி.மீ. நீண்ட போலீஸ் துரத்தலுக்குப் பிறகு, அந்த காரில் இருந்த மூன்று பேரும் பிடிபட்டனர். இந்த சம்பவம் கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்தது. கோவில்பாளையம் போலீசார் விளாங்குறிச்சி சாலையில் வாகனச் […]