கோவை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாநகரப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முடிவதற்கு மாநகரப் பகுதியைச் […]