தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. […]