மழைக்காலம் தொடங்கியவுடன் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்று மயில் தோகையை விரித்து ஆடுவதுதான். பலரும் மழை பெய்யப்போகிறது என்ற மகிழ்ச்சியால் மயில்கள் நடனமாடுகின்றன என்று நினைத்தாலும், உண்மையில் அதற்கு இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த பல காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக பருவமழை தொடங்கும் காலத்தில்தான் மயில்களின் இனப்பெருக்க பருவமும் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் ஆண் மயில்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவற்றின் […]

