செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து  செங்கல்பட்டுவிற்கு  குடி பெயர்ந்தார். செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமாறியாக வெட்டியது. படுகாயம் அடைந்தவர் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பின் சிகிச்சை […]