சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 […]