நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டு என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. …