2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் […]

கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏழைகளை குறிவைத்து கிட்னி திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், இடைத்தரகர் ஆனந்தன் என்பவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் திமுக நிர்வாகி […]

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழுவில் ஓய்வூதியம் குறித்த கருத்துகளை வழங்குவதற்கு வரும் 18.8.2025 முதல் சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஆசிரியர், அரசு அலுவலர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. . இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுகாதாரத்துறை சார்பில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,672.52 கோடி மதிப்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். இன்றைக்கு […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் […]

சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் […]