திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; […]

2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின் போது திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கல்வியாளர் அணியின் தலைவராக புகழ்பெற்ற பேச்சாளர் புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி மதுரையில் […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் […]

திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த […]

தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்எஸ்ஐ பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, […]

பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]

தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]

நேற்று நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. எதிர்கட்சிகல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி […]

இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார் ‌ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் […]