மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும். […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் […]

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2008-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி சர்வேயை நடத்தி முடித்துள்ளன; நடத்தி வருகின்றன. […]

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து, உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் […]

மழையில் நனைந்து சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே..? என் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட பயிர்களின் […]

செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]