ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மூன்று டிக்கெட் பரிசோதகர்களை மது போதையில் இருந்த பயணிகள் குழு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்களிடம் இருந்த டிக்கெட் பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் கையடக்கக் கருவிகளையும் அந்தக் குழுவினர் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் […]

