கவுதமாலா நாட்டில் அடுத்தடுத்து பல முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகளில் விரிசல் காணப்பட்டதால் சாலையில் மக்கள் தஞ்சமடைந்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் முதல் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் கவுதமாலா நகரத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில் ஏற்பட்டது. அதன் பின்னர் பல அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகின. அமெரிக்க புவியியல் ஆய்வு’ அறிக்கையின்படி, புதன்கிழமை அதிகாலை 3.11 மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் […]

சீனாவின் எல்லைக்கு அருகில் தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் தொலைதூர மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவிலும், 20 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமிர் மலைகளில் சில ஆயிரம் மக்கள் வசிக்கும் மாவட்ட தலைநகரம் […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]

மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த […]