மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டி […]

அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் […]

தமிழகத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கி வருகிறது. மேலும், 50 சதவீதத்துக்கும் மேல் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். […]

கொச்சியில் இருந்து நேற்று சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த […]

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; வரும் தேர்தலில் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதனை உறுதி செய்துள்ளது இங்கு கூடியுள்ள கூட்டம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஓட்டு வாங்கும்போது உங்களை அணுகினார். ராஜினாமா செய்ய உங்களை சந்தித்தாரா…? கடந்த 26, 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இங்கு […]

எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமிதான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோட்டில் மேடை ஏறிய முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எது நடந்தாலும் “ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்த […]

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து, உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் […]

தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு […]