தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதத்தில் ; துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி […]

தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற ரூ.19,235 கோடியில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜூலை 31-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 3 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர்கள் […]

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 29-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் வருகிற 29.7.2025, செவ்வாய்க்கிழமை […]

தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வாரியத்துக்கு வழங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் […]

தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் […]

மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில் புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.  தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் […]

மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]