fbpx

அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட AI கருவிகளை அதிகாரப்பூர்வமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள் தரவு பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, டீப்சீக் பயன்பாட்டில் இதே போன்ற கட்டுப்பாடுகளை …

திமுக அரசுக்கு 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாடம் புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிரித்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. …

மெட்டா நிறுவனம் சுமார் 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உணவு வவுச்சர்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காகவே ஊழியர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் இந்த பணி நீக்கம் நடந்ததாக கூறப்படுகிறது. சில ஊழியர்கள் உணவு வவுச்சர்களை வைத்து பற்பசை, சலவை சோப்பு, ஸ்காட்ச் டேப் மற்றும் ஒயின் கண்ணாடிகள் போன்ற வீட்டு …

ராஜினாமா கடிதத்தை பணியமர்த்துபவர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அந்த ஊழியர் அதை திரும்பப் பெற்றால், அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில் கூறியது. ரயில்வேயில் ஒரு ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இந்த தீர்ப்பை வழங்கியது.

பணியாளரின் ராஜினாமா கடிதத்தை பெறுவது மட்டுமே ராஜினாமா …

நிறுவனங்கள் போலியான வேலை செய்திகளுக்கு விளம்பரம் செய்வதால் ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமையினால், இல்லாத வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதனையே பேய் வேலைகள் என்கின்றனர். பேய் வேலைகள் சந்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது இங்கே காணலாம்.

பேய் வேலைகள் என்றால் என்ன? அது இளைஞர்களை எவ்வாறு பாதிக்கிறது?

ஒரு பிரபலமான தளத்தில் காலிபணியிடங்கள் குறித்த செய்தியை பார்த்தவுடன், அதற்கு …

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தங்கள் நிறுவனத்தின் பணிபுரியும் 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் கடந்த 1923 ஆம் ஆண்டு ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் …

EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. EPFO இன் ஓய்வூதிய விதிகளில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இது சுமார் 23 லட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.

ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை …

முன்னணி வங்கி நிறுவனமான எஸ் வங்கி 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. வங்கியின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக செலவுகளைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், வரும் நாட்களில் வங்கியில் இதுபோன்ற பணிநீக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்று பலர் கணித்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்திற்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.…

300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால் கேபின் க்ரூ உறுப்பினர்கள் 25 பேரை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது.  இதனையடுத்து டாடா …

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று …