நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர். …