அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வர வேண்டும் என்ற இபிஎஸ்-ந் அழைப்பை நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் […]

நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.. தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, Bye, bye சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் […]

எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் […]

அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]

கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோவில்கள் சார்பில் தற்போது 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மட்டும் 22,455 மாணவர்கள் பயின்று வருகின்றனர். […]

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் […]