தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் […]