தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கினாலும், தினமும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது குறிப்பாக வயதானவர்களின் உடல்நலனில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் பரவலாக பருகப்படும் ஆப்பிள் ஜூஸ், இன்று பெரியவர்களிடையே ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பருக வேண்டிய ஒரு பானமாக மாறியுள்ளது. ஆப்பிள் ஜூஸ் நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும் அதிசய பானம் என்றாலும், அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் குறைந்த […]

உணவுகள் டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து […]

அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, ஜூலை 8 நிலவரப்படி, NB.1.8.1 (நிம்பஸ்) மற்றும் XFG (ஸ்ட்ராடஸ்) போன்ற புதிய மாறுபாடுகளால் புளோரிடா மற்றும் டெக்சாஸ் உட்பட மொத்தம் 25 அமெரிக்க மாநிலங்களில் தொற்றுகள் அதிகரிப்பதைக் காண்கிறோம், இது “கோடை அலை” திரும்புவதைக் குறிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கோடை அலை ஏற்படும் என்று […]

பெரும்பாலான மக்கள் காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்திருக்காமல், ஸ்னூஸ் பட்டனை அழுத்தி இன்னும் சில நிமிடங்கள் தூங்க முயற்சி செய்கிறார்கள். இந்தப் பழக்கம் மிகவும் பொதுவானது, ஆனால் அது உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இதன் விளைவாக, நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள், மேலும் எரிச்சலும் அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பழக்கத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், தூக்கத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்க […]

வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். 40 வயதுக்கு முன் இவை அரிதானவை, ஆனால் வயதுக்கு ஏற்ப இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது, கோவாவின் மணிப்பால் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ் கூறுகையில், புரோஸ்டேட் என்பது சிறுநீர்ப்பைக் குழாயைச் சுற்றி அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது விந்தணுவை ஆதரிக்கும் திரவத்தை உருவாக்குகிறது. இது பொதுவாக மெதுவாக வளரும் […]

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]