மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு […]

