இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]
Fisherman
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், கனகராஜிடம் “ஏன் என் மனைவியை தவறாக பேசினாய்? என்று தட்டிக்கேட்டார். […]
சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, […]
ஏப்ரல் 15-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் மாதம் 14-ம் தேதி வரை 61 […]
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து. அதனடிப்படையில் சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும் இயந்திரங்களுக்கும் நிவாரணம் வழங்க […]
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]