தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]