அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் […]

அடுத்தடுத்து உயிரிழந்த அரசு பள்ளி மாணவர்களின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி […]

அரசுப் பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் […]