GSLV-F17 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-05) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற காலை நேர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று 36,000 கி.மீ உயரத்தில் உள்ள பூமி சுழற்சிக்கு இணையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ‘விண்ணில் இந்தியாவின் கண்’ […]