வெள்ளிப் பொருட்களுக்கு கட்டாய ஹெச்யுஐடி (பிரத்தியேக ஹால்மார்க் அடையாள எண்) திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று மாதங்களுக்குள், 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் இந்தப் பிரத்தியேக எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது நகைக்கடைக்காரர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் வலுவான வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் திட்டம் தன்னார்வமாக இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்பட்ட எந்த வெள்ளிப் பொருளுக்கும் ஹெச்யுஐடி எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஹால்மார்க் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் கிட்டத்தட்ட […]