இந்து வேதங்களில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கும் கிரகத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செவ்வாய்க்கிழமை குறிப்பாக அனுமன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் சக்தி மற்றும் ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வேதங்களின்படி, செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் அனைத்து துக்கங்களும் நீங்கும். இதனுடன், கிரக தோஷங்கள் மற்றும் சனியின் தாக்கத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஸ்கந்த புராணத்தில் அனுமன் செவ்வாய்க்கிழமை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Hanuman
திருவண்ணமாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போல் ஆஞ்சநேயரே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் கோயில் ஒன்று இருக்கிறது என என்றால் கண்டிப்பாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உண்மை தான். அப்படி ஒரு கோவில் சென்னையில் உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாக்கம். இங்கு அழகிய கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது […]