மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.. ஆம், வருங்கால வைப்பு நிதி (EPFO) மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் உள்ள சம்பள வரம்பை அதிகரிக்க அது தயாராகி வருகிறது. சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளே இந்த முன்மொழிவுக்கு முக்கிய காரணங்களாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த மாற்றம், லட்சக்கணக்கான ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வில் சமூகப் […]
Hike
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் […]
சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் […]
தமிழகத்தில் இன்று முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விலையில் தமிழகம் முழுவதும் உள்ள நெல் […]
புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், […]
மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]

