சென்னை திரும்பும் தென்மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 14-ம் தேதி இரவு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை சென்னை தாம்பரத்தை வந்தடையும். விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். தற்போது விடுமுறை முடிவுக்கு வருவதால், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல் […]