ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. மகளிர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் […]

