பாகிஸ்தானின் உள்ள தனது அலுவலகங்களை திடீரென மூடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ம் ஆண்டு, மார்ச் 7-ம் தேதி பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. கால் நூற்றாண்டு காலமாக, இந்த நிறுவனம் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. […]

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து குவாட் குழுவின் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கண்டிக்கத்தக்க செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் “ எல்லை தாண்டிய […]