கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. […]

