நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் தினமும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டெல்லி அரசின் வழக்குத் தொடர்துறை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, அரசு வழக்கறிஞர்கள் தங்களது மாவட்ட நீதிமன்ற வளாகம் அல்லது மாவட்டப் பொறுப்பாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ, மொபைல் […]