இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]

உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியா என பொதுவாக நம்பப்படுகிறது, ஏனெனில் நம் நாட்டின் வரலாறு 10,000 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகை ஆய்வு (World Population Review) வெளியிட்ட ஒரு சர்வேயின் படி, அது உண்மையல்ல. அந்த அறிக்கையின் படி, உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியாவுக்கு அல்ல, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் அந்த நாட்டின் நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு […]

ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

ஈரானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரான ஷிராஸ் நகர் பகுதியில் நேற்று காலை பேருந்து ஒன்று 55 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]