பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முதன்மை குற்றவாளி நந்தன் யாதவை, காவல்துறையினர் என்கவுண்டர் செய்து பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 19 அன்று மாலை நடைபெற்றது. ஒரே பயிற்சி வகுப்பில் படிக்கும் நண்பர்களான சிறுவனும் சிறுமியும் வீட்டிற்குத் திரும்பும்போது, புகைப்படம் எடுப்பதற்காக வழியில் ஒரு இடத்தில் நின்றுள்ளனர். […]

