முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தகவல் …