கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். […]

அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். கட்சி பணிகளை சரிவர செய்யாததால் வடசென்னை, கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, […]