தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். […]