தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகல்-தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏழாவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாள் முழுவதும் […]