இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி. இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் […]