’’ஆம்புலன்ஸ் வாகனம் செல்லட்டும்’’ வாகனத்தை நிறுத்திய மோடி!

இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி.

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் உடனே தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் செல்லட்டும் என காத்திருந்தார்.

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது. பிரதமர் மோடியின் இத்தகைய செயல் சாலை விதிகளை கடை பிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது பெருமையை சேர்த்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பியில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்திய பிரதமர் மோடி வீடியோ வைரலாகி வருகிறது.


Next Post

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்…. 64,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர்!!

Wed Nov 9 , 2022
உலக அளவில் பாம்பு கடித்து இறப்பவர்களில் கட்டித்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தேசிய திட்டத்தின் கீழ் பாம்பு கடி தடுப்பு நடவடிக்கையை சேர்க்க அரசாங்கம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எனினும மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 64,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக அதிர்ச்சி […]

You May Like