Thaipusam: தைப்பூச திருநாளானது தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த திருநாளில் பக்தர்கள் முருக பெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். பிப்ரவரி 11ஆம் தேதி இன்று தைப்பூசம் என கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 48 …
lord muruga
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டது என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் என்றால் அது திருச்செந்தூர் தான். மற்ற கோயில்கள் எல்லாமே மலைக்கோயில்களாகவே இருக்கும்.
திருச்செந்தூரை …
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே முருகபெருமான் வீற்றிருக்கும் திருமலை கோவிலின் வரலாறு பற்றியும், எப்படி செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கோவில் உருவான வரலாறு : முற்காலத்தில் இந்த திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. அதற்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் …
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் …