fbpx

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பது …

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் …

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அவரிடம் வழங்கவுள்ளது. இதனால் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடியே காணொளி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். கே.என்.நேரு, ஏ.வ.வேலு, …

மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. கல்வி துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும், மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களின் அர்பணிப்பை போற்றும் வகையில் இன்றைய தினம் கொண்டாட்டப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் …

அமெரிக்கா சிகாகோவில் சைக்கிளில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சான் …

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கருவுற்ற சமயத்திலும், குழந்தை பிறந்த பிறகு அதை நன்றாக கவனித்துக் கொள்ளவும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. மகப்பேறு சலுகை சட்டத்தின் படி, இதன் பலனை முழுதும் பெற உரிமையுள்ள பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், 6 மாத காலத்திற்கு …

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். அமெரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு …

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 இணைச் செயலாளர்கள் பணியிடம், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பணியிடம் என மொத்தம் 45 அதிகாரிகள் நேரடி நியமனம் (Lateral Entry) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி இந்த …

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா…