fbpx

சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து …

சென்னை உயர்நீதிமன்றத்தின் காலிப்பணியிடங்கள் குறிப்பிட்ட தேர்வு முறைகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பட உள்ளது.

காலிப்பணியிடங்கள் : 75

கல்வித் தகுதி : B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. …

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு …

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கூட செல்லாமல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி …

காதுகேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளருக்கு தமிழ் மொழி நேர்முக தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவிப்பொறியாளராக 2014ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் வித்யாசாகர். காது கேளாத, வாய் பேச தெரியாத வித்யாசாகர் …

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் உள்ள 30 ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு தான் அது. 1 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் : ஒரு ஆண்டு …

செந்தில் பாலாஜி  ஊழல் வழக்கை விசாரிக்க  தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். …

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை …

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் …

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை …