பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிப் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் […]

இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]

கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சியின் தலைவர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனதில் கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றுப்பொடுகையில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்தப் பகுதியில் சீமை கருவேல புதர்கள் நிரம்பி காப்பி மணல் திட்டுகளாக மாறி இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத […]

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனதில் நான் தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிலர் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆண் அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளில் 95 லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்று […]

வைகை நதியை பாதுகாக்க, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய திட்டத்திற்கு இணையான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.புஷ்பவனம் தாக்கல் செய்த மனுவில் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட சட்டப்பூர்வ நபரின் அந்தஸ்து கொண்ட வாழும் நிறுவனங்களாக அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட […]