உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது. வேலைப்பளு, முறையற்ற உணவுப் பழக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடு, போதிய தூக்கமின்மை எனப் பல காரணங்கள் உடல்நலத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக, ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது மூட்டுகளில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் அன்றாடச் செயல்களைக்கூட சிரமத்துடன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின் என்ற வேதிப்பொருள் உடைக்கப்படும்போது உருவாகும் கழிவுப் பொருள். […]

