மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், ‘மெய்தி’ என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் […]