நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி […]

மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலாஜி (வயது 53), காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருடன், 26 வயதான கணேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூன் 12) மதியம், கடையில் பழுது […]