கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இது குறித்து என்எம்சி செயலர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை மற்றும் இதர கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு முன்னதாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று […]

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,073, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். […]

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக சையது தாஹிர் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஆசிரியர் உட்பட 41 மாணவிகள் பாலியல் ரீதியான புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது […]